சுகாதார அமைச்சு மேலதிக நேரம், கட்டாய தினசரி ஊதியத்துக்காக 3823 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவு.-- தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட அறிக்கை

சுகாதார அமைச்சு மேலதிக நேரம், கட்டாய தினசரி ஊதியத்துக்காக 3823 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவு.-- தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட அறிக்கை
சுகாதார அமைச்சு 2023ஆம் ஆண்டில் திறைசேரி செயலாளரின் சுற்றிக்கைக்கு மாறாக, மேலதிக நேர மற்றும் கட்டாய தினசரி ஊதியத்துக்காக 3823 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலவழித்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
மேலதிக நேரம் மற்றும் விடுமுறை நாட்களுக்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை சம்பள பட்ஜெட்டில் 72 வீதம் என்றும் அறிக்கை கூறுகிறது.
வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களுக்காக மூன்று கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவழித்து சுகாதார அமைச்சினால் நிறுவப்பட்ட 213 கைரேகை இயந்திரங்கள் செயலிழந்து காணப்படுவதாக தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல் சுகாதார அமைச்சு தொடர்பாக வெளியிடப்பட்ட சமீபத்திய தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
