ராஜபக்ஷ குடும்பத்தினர் கொள்ளையடித்த மக்கள் பணத்தை வெளிக்கொண்டு வருவோம்.-- வசந்த சமரசிங்க ஆணித்தரம்.

நாமல் உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் கொள்ளையடித்த மக்கள் பணம் எங்கிருக்கின்றது என்பதை விரைவில் கண்டுபிடித்து வெளிக்கொண்டு வருவோம் என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க கூறியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வந்து இரு வாரங்களாகியும் தங்களின் ஊழலை ஏன் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள வசந்த சமரசிங்க,
"நாமல் ராஜபக்ஷ போன்றவர்கள் கொள்ளையடித்த பணம் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா? வேறு வகையில் பதுக்கப்பட்டுள்ளதா? என்பதை விரைவில் கண்டுபிடித்து வெளிக்கொண்டு வருவோம்.
இது ஊழல்வாதிகள் தாங்கள் இன்னும் மாட்டிக் கொள்ளவில்லை என்று சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கும் கடைசித் மணித்துளிகளாகும்.
மிக விரைவில் அவர்கள் கூண்டோடு மாட்டிக் கொண்டு தங்கள் தவறுகளுக்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும் - என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
