தெற்கு நெடுஞ்சாலையில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து.-- சாரதி மரணம், 12 வெளிநாட்டவர் காயம்
6 months ago

இலங்கை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தங்காலை நோக்கிச் செல்லும் பாதையில், 138ஆவது தூண் அருகே நேற்று காலை ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று அதே திசையில் பயணித்த சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த பஸ் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பஸ்ஸில் பயணித்த 12 வெளிநாட்டவர்கள் காயமடைந்த நிலையில் தங்காலை ஆதார வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் பஸ்ஸில் ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகள் 30 பேர் பயணம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
