பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் களமிறங்க பங்காளிக் கட்சிகள் தீர்மானம்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் ஒன்றாகக் களமிறங்குவதென அதன் பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ. பி. ஆர். எல். எவ். தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் உள்ளிட்ட 15 பேர் கலந்துகொண்டிருந்தனர்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் நிலையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டு, இறுதியில் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் சார்பிலேயே பொதுத் தேர்தலில் களமிறங்குவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
