நாணயத்தாள்களைக் காலால் மிதித்த தியாகி நிறுவுநர் பிணையில் விடுவிப்பு

1 year ago


இலங்கை நாணயத்தாள்களைக் காலால் மிதித்து அவமானப்படுத்திய குற்றச்சாட்டில் தியாகி அறக்கொடை நிறுவுநர் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் முன்னிலையாகிய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவரது உடல் சோர்வே நாணயத்தாள்களை மிதித்தமைக்குக் காரணம் என்று அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.திருக்குமரன் முன்வைத்த காரணத்தை ஏற்க நீதிவான் மறுத்தார்.

மனநிலையை வைத்து அவர் நீதிமன்றத்துக்குக் கல் எறிந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்றும், அவரது செயற்பாடு பற்றிய காணொலியை வெளியிட்டால் ஏற்றுக்கொள்வீர்களா? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அண்மைய பதிவுகள்