
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் எதிர்வரும் 21ஆம் திகதி -வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசா நாயக்கவால் முன்வைக்கப்படும்.
அரசமைப்பின் 33 (அ) உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் அரசமைப்பின் 33 (ஆ) உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்தின் வைபவ ரீதியான அமர்வுகளில் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
இதன்போது ஜனாதிபதியால் அவரின் அரசாங்கத்தின் எதிர்கால நோக்கு தொடர்பிலான விளக்கமான பகுப்பாய்வு கொள்கை பிரகடனத்தின் ஊடாக பாராளுமன்றத்துக்கும் மக்களுக்கும் முன்வைக்கப்படும்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 21ஆம் திகதி - வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
