
ஈரான் தலைநகர் தெஹ்ரான் பகுதியில் பல வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தெஹ்ரானின் மேற்கு பகுதியில் 7 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அங்குள்ள இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதில் வழங்கும் நோக்கில் தாக்குதல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நிலைமையை அவதானித்து வருவதாக ஈரான் அறிவித்துள்ளது.
அதேநேரம், ஈரான் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
அத்துடன் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட தகவல்களும் வெளியாகவில்லை.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
