நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வைத்தியர் அர்ச்சுனா இன்று கட்டுப்பணம் செலுத்தினார்.

1 year ago


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று (10) நண்பகல் 12 மணியளவில் கட்டுப்பணத்தை அவர் செலுத்தியுள்ளார்.

வைத்தியர் அர்ச்சுனா சுயேட்சையாகப் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது. 



அண்மைய பதிவுகள்