நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பல நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒருவரிடம் இருந்து 63,818,452 ரூபாவை பெற்றுக்கொண்டு நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளாமல் மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 31 வயதான பெல்ஜிய பிரஜை என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
