வவுனியா, பாவற்குளம் பகுதியில் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
6 months ago

வவுனியா, பாவற்குளம் பகுதியில் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியா, பாவற்குளம், படிவம் இரண்டு பகுதியில் சாரதி பஸ்ஸை நிறுத்தி விட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுவதற்காக பஸ்ஸைச் செலுத்தினார்.
அவ்வேளை சைக்கிளில் பயணித்த இரண்டு சிறுவர்கள் வீதியை ஊடறுக்க முற்பட்டபோது பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானார்கள்.
இதில் சைக்கிளில் பயணித்த 7வயதுடைய அப்துல் மஜித் உமர் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் உளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
