எம்.பி அர்ச்சுனா இராமநாதன் தனது பாராளுமன்ற உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் சபாநாயகருக்கு கடிதம்

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனது பாராளுமன்ற உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் சபாநாயகருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரத்தை பெறமுடியாமலிருப்பது குறித்த தனது ஆழ்ந்த கரிசனையை வெளியிடுவதாக அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ள அவர், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற அடிப்படையில் எனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு இந்த உரிமை மிகவும் அவசியமானது என கூறியுள்ளார்.
உங்கள் அலுவலகம் அறிவித்தது போல இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளபோதிலும் இந்த விவகாரத்துக்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை எனவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையை சரி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை சபாநாயகர் எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அர்ச்சுனா, இந்த விடயத்துக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தின் அமர்வுகளில் இருந்து வெளிநடப்பு செய்ய தீர்மானித்துள்ளதாக கூறியுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
