இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதிக்கு ஜனாதிபதி மாளிகையில் நேற்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பு




இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஜனாதிபதி மாளிகையில் நேற்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜனாதிபதி மாளிகையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர்.
இதன்போது இரு நாட்டு முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்தப்பட்டது.
இலங்கையின் ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்ற பிறகு, முதல் வெளி நாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் செய்த அநுரகுமாரவை நேற்று முன்தினம் மாலை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் அரச அதிகாரிகள் வரவேற்றனர்.
அதன் பிறகு, மத்திய அமைச்சர்ளான நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார வைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு ஜனாதிபதி மாளிகையில் நேற்று சிவப்பு கம்பளம் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து, ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சந்தித்தார். அப்போது, இருவரும் பேச்சு நிகழ்த்தினர்.
இதில் குறிப்பாக இந்தியா இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
மேலும், மீனவர்கள் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேச்சு நடத்தினர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
