
நெடுவூர்த் திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நெடுந்தீவில் நடைபெறவுள்ளது.
நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் "மீண்டும் ஊருக்குப் போகலாம்" என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
நெடுந்தீவிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் மக்கள், நெடுந்தீவு குறித்த ஆர்வலர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பர்.
இந்த நிகழ்விலே மூலிகைக் கண்காட்சி, கல்விக் கண்காட்சி, பனைசார் உணவுகள், விவசாய கைவினைகள் கடலுணவு சார்ந்த உள்ளூர் உற்பத்தி பாரம்பரிய கலை நிகழ்வுகள், விளையாட்டு கள் நூல் வெளியீடு இலக்கிய வெளியீடு போன்றனவும் நடைபெறவுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
