யாழ் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு வேலைத்திட்ட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது




யாழ் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று(14) யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
இதில் நிலத்தடி நீர் மாசடைதல், கழிவுகள் மீட்டெடுத்தல், நன்னீர் குடிநீர் திட்டம்., சந்தைப்படுத்தல் உட்கட்டமைப்பு, உள்ளூர் கடன்,உற்பத்திகள், தேசிய அபிவிருத்தி திட்டமிடல், ஒருங்கிணைந்த கிராமிய சமூக பொருளாதார கட்டமைப்பினை வலுப்படுத்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.
56 மில்லியன் ரூபா செலவினங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுடான ஒதுக்கப்படுகிற திட்டங்களில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் தலா ஒருவருக்கு 09 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுவதற்கான முன்மொழிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 500 மில்லியனுக்கான திட்டங்களுக்கு முன்மொழிவுகளுக்கான கருத்துக்கள் எடுக்கப்பட்டது.
இவ் கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.கஜேந்திரகுமார் , தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராகிய வைத்தியர் வ.பவானந்தராஜா, பொ.ரஜீவன், இளங்குமரன்,மற்றும் மேலதிக அரசாங்க காணி அதிபர் ஸ்ரீமோகனன்,திட்டமிடல் பணிப்பாளர் சுரேந்திரகுமார், வடமாகாண அவைத் தலைவர்கள் சி.சிவஞானம், வடமாகாண ஆளுநரின் செயலாளர் நந்தகோபாலன்,உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள், பிரதேச சபை செயலாளர்கள்,பதவிநிலை அதிகாரிகள்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
