அமெரிக்கப் பிரதிநிதிகள் இன்று சனிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தனர்.



அமெரிக்கப் பிரதிநிதிகள் இன்று சனிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தனர்.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள், ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச முகவர் அமைப்பு மற்றும் அமெரிக்காவின் திறைசேரி துறை ஆகியவற்றின் அமெரிக்கப் பிரதிநிதிகள் இன்று சனிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தனர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தற்போதைய அரசின் ஊழல் ஒழிப்பு வேலைத் திட்டத்துக்கு எந்த நேரத்திலும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும், இலங்கைக்கு வெளியில் கொண்டு செல்லப்பட்டுள்ள பணத்தை நாட்டுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவல்கள் தொடர்பான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் இராஜாங்க செயலாளர் டொனால்ட்லூ தெரிவித்தார்.
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க அமெரிக்க அரசு தயாராக இருப்பதாகவும் உதவி இராஜாங்க செயலாளர் தெரிவித்தார்.
அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடயங்கள் தொடர்பில் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டு புதிய அரசு கொண்டு செல்லும் வேலைத்திட்டத்துக்கு அமெரிக்க அரசின் பாராட்டுக்களையும் அவர் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,
இலங்கையில் ஊழல் மற்றும் வீண் விரயம் தொடர்பில் அரசியல் கலசாரம் நேரடியாக தாக்கம் செலுத்துவதாகவும், புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கி ஊழலையும் வீண் விரயத்தையும் மட்டுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் ஊடாக கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டத்தை ஆரம்பித்திருப்பதாகவும்,
புதிய தொழில்நுட்பத்தை அரச துறையில் அறிமுகப்படுத்தி தரமான அரச சேவையை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரொஷான் கமகே, இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் ஜூலி சங், ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச முகவர் அமைப்பின் ஆசியாவுக்கான பிரதி உதவி நிர்வாகி அஞ்சலி கவூர், ஐக்கிய அமெரிக்காவின் திறைசேரி திணைக்களத்தின் ஆசிய மற்றும் பசுபிக் வலயங்களுக்கான பிரதி உதவிச் செயலாளர் ரொபர்ட் கப்ரொத், ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச முகவர் அமைப்பின் தூதுக்குழுவின் பணிப்பாளர் கேப்ரியல் க்ராவ், அரசியல் மற்றும் பொருளாதார அலுவல்கள் தொடர்பான ஆலோசகர் ஷோன்கிரே ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
