யாழ்.பல்கலைக் கழக ஊடகக் கற்கைகள் துறையின் ‘கனலி' மாணவர் சஞ்சிகை ஐந்தாவது இதழ் வெளியீட்டு

1 year ago


யாழ்.பல்கலைக் கழக ஊடகக் கற்கைகள் துறையின் ‘கனலி' மாணவர் சஞ்சிகை ஐந்தாவது இதழ் வெளியீட்டு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறீ சங்கீர்த்தனன் தலைமையில் பல்கலைக்கழகத்தின் நூலக கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்              சி. சிறீசற்குணராஜா, சிறப்பு விருந்தினராக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கலைப்பீட பீடாதிபதி சி. ரகுராம் முதல் பிரதியை வெளியிட துணைவேந்தர் சி. சிறீசற்குணராஜா அதனைப் பெற்றுக்கொண்டார்.

யாழ்ப்பாண பல்கலைக் கழக பொன்விழா நிகழ்வுகளின் ஓர் அங்கமாக நடந்த இந்த நிகழ்வில் ஊடகக் கற்கைகள் துறை விரிவுரையாளர் அனுதர்ஷி கபிலன், தமிழ்த்துறை விரிவுரையாளர்          த. அஜந்தகுமார், சிரேஷ்ட           ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.