
டொரன்ரோவில் கடும் பனிப்பொழிவு ஏற்படும் என பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு கடும் பனிப்பொழிவு நிலைமை நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
டொரன்டோ பெரும்பாக பகுதியின் அதிவேக நெடுஞ்சாலைகளில் 100 இற்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் இந்த வார இறுதியில் பதிவாகி இருந்தன என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று 4 முதல் 8 சென்ரி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டிருந்தது.
கனடிய சுற்றாடல் திணைக்களத்தினால் இது தொடர்பில் பயண அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு பனிப்புயல் தாக்கங்கள் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பனிப்பொழிவினை அகற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
