இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

1 year ago


இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம் தலைமையில் வவுனியா, குடியிருப்பில் அமைந்துள்ள கட்சியின் தாயகம் அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்திலே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசு கட்சி யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான விடயங்கள் மற்றும் கட்சியின் தலைமை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளன.

இக்கூட்டத்திலே பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், குகதாசன், சாணக்கியன் மற்றும் வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உட்பட கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.