அவுஸ்திரேலிய மாணவர் விசாக் கட்டணம் இரு மடங்காக அதிகரிப்பு

1 year ago

அவுஸ்திரேலிய அரசாங்கம் மாணவர் விசாக் கட்டணத்தை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இதுவரை காலமும் 710 அவுஸ்திரேலிய டொலராக இருந்த மாணவர்களின் விசாக் கட்டணம் இம்மாதம் முதலாம் திகதி முதல் 1600 அவுஸ்திரேலிய டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அவுஸ்திரேலிய விசாக் கட்டணம் பல மடங்காகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் விசாக் காலம் முடிவடைந்த பின்னரும் சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தொடர்ந்து தங்கியிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்குடனே விசாக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அண்மைய பதிவுகள்