இவ்வருடத்தில் 966,604 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது
1 year ago
இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதிக்குள் 966,604 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் இதுவரையான காலப் பகுதிக்குள் 69,825 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் 208,253 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரி மாதத்தில் 218,350 சுற்றுலாப் பயணிகளும், மார்ச் மாதத்தில் 209,181 சுற்றுலாப் பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 148,867 சுற்றுலாப் பயணிகளும், மே மாதத்தில் 112,128 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யா, இந்தியா, ஜேர்மனி, பிரித்தானியா, சீனா, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





