
பிரபல நடிகை பியூமி ஹன்சமாலி யின் 19 வங்கிக் கணக்குகள் தொடர் பில் விசாரணைகள் முன்னெடுக் கப்பட்டுள்ளன எனக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்படி வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கையை விரைவாக வழங்குமாறு உரிய நிதி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து, தேவையேற்படும் பட்சத்தில் பியூமி ஹன்சமாலியிடமும் வாக்கு மூலம் பெறப்படுமென சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.
பியூமி ஹன்சமாலி, குற்றப்புல னாய்வு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவிற்கு கடந்த திங்கள்கிழமை சென்றிருந்தார்.
அவர் கோடிக்கணக்கான ரூபா பெறு மதியான சொத்துக்களை ஈட்டியுள்ளமை தொடர்பான முறைப்பாட்டிற்கு அமைய முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் சென்றிருந்தார்.
அவர் அன்றைய தினம் வங்கிக் கணக்குகள் தொடர்பான தரவுகளையும் எடுத்துச் சென்றிருந்தார்.
இதனிடையே, அன்றைய தினம் பியூமி ஹன்சமாலி வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருக்கவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய, அவரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
