கனடாவிற்குள் தீவிரவாத சந்தேக நபர் பிரவேசிக்க எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கனடாவிற்குள் தீவிரவாத சந்தேக நபர் பிரவேசிக்க எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கனடாவின் பிரதான எதிர்க்கட்சி யான கன்சர்வேட்டிவ் கட்சி இக் கேள் வியை எழுப்பியுள்ளது.
அண்மையில் ஐ.எஸ் தீவிரவாத சந்தேக நபர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டிருந்தார். பாகிஸ் தானைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
20 வயதான முகமட் சஹாஸெப்கான் என்ற பாகிஸ்தானிய பிரஜை இவ்வாறு, கியூபெக் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
அமெரிக்கா யூதர்களை இலக்கு வைத்து ஐ எஸ் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு இந்த நபர் முயற்சித்தார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஐ எஸ் தீவிரவாதி எவ்வாறு கனடாவிற்கு வருகை தந்தார் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கான்சர்வேட்டிவ் கட்சி கோரியுள்ளது.
ஏற்கனவே தீவிரவாத தாக்குதலை மேற்கொள்ளத் திட்டமிட்டு இருந்த தந்தையும் மகனையும் கனடிய பொலிஸார் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாத சந்தேக நபர்கள் எவ்வாறு கனடாவிற்குள் அனுமதிக் கப்படுகின்றார்கள் என்பது குறித்து அரசாங்கம் தகவல்களை அம்பலப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சி கோரியுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
