இலங்கையில் வடக்கு, கிழக்கில் 5 தொடக்கம் 11ஆம் திகதி வரை பெரு மழை வீழ்ச்சி கிடைக்கும்.-- கலாநிதி நா. பிரதீபராஜா தெரிவிப்பு

எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் கனமானது முதல் மிகக்கனமானது வரையான மழை வீழ்ச்சி கிடைக்கும் என்று யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை தலைவர் கலாநிதி நா. பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த மாதத்தில் 3 தாழமுக்க நிகழ்வுகள் தோன்ற வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் 6 அல்லது 7ஆம் திகதி இலங்கைக்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் இலங்கை முழுவதையும் தன் வெளி வளையத்துக்குள் உள்ளடக்கியதாக காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
இதனால் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையான காலப் பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
