கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர சேவைக்கு நேற்றுக்காலை கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் அவசர சேவைக்கு நேற்றுக் காலை மேற்கொள்ளப்பட்ட அழைப்பின்போது, அடுத்த 30 நிமிடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கண்டி பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் நீதிமன்ற வளாகத்துக்கு விரைந்தனர்.
நீதிமன்ற வளாகத்தில் இருந்த பணியாளர்கள் மற்றும் வழக்கு விசாரணைக்காக வருகை தந்தவர்கள் உடன்
வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து தேடுதல் வேட்டை இடம்பெற்றது. கண்டி நகரிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கண்டி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன.
வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, பொலிஸ் அவசரப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பிலும் விசாரணை ஆரம்பமாகியுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கைபேசியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் தன்னுடைய கைபேசி சிலநாள்களுக்கு நேற்று முன்தினமே தொலைந்துவிட்டதாக கைபேசியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
