
கிழக்கு மாகாணத்தில் 67 பேருக்கு எய்ட்ஸ் நோய் -- சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 67 பேருக்கு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மாகாணத்தில் எய்ட்ஸ் நோயை தடுப்பதற்கு ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகர தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை பணித்துள்ளார்.
இதற்கமைய மட்டக்களப்பு நகரில் எய்ட்ஸ் நோய் தடுப்பு பற்றிய மாகாண மட்டத்திலான விசேட கருத்தரங்கு ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் திருகோணமலை மாவட்டத்தில் 26 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 25 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 பேருமாக 67 பேருக்கு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மத்திய சுகாதார அமைச்சு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் எய்ட்ஸ் நோயை இல்லாது செய்வதற்கு தீவிர நடவடிக்கை எடுப்பதற்கான திட்டமிடல்கள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட கருத்தரங்கில் கிழக்கு மாகாணத்தில் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் திணைக்களம் மாத்திரமன்றி ஏனைய அரசு திணைக்களங்களின் ஒத்துழைப்பை பெற்று, இந்தத் திட்டத்தை விரிவாக மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இந்த கருத்தரங்கில் ஆளுநர் கூறுகையில்,
"எய்ட்ஸ் நோயை கிழக்கு மாகாணத்தில் ஒழித்துக் கட்டுவதற்கு எடுக்கப்படும் தீவிர நடவடிக்கைகளுக்கு சகல அரச திணைக்களங்களின் அதிகாரிகள், வைத்திய சேவையாளர்கள் மற்றும் சுகாதார சேவை திணைக்களத்தின் பணியாளர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"-என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
