காஸாவில் மூன்று நாட்கள் போர் இடைநிறுத்தத்துக்கு இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது.

போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட காஸாவில் மூன்று நாட்கள் போர் இடைநிறுத்தத்துக்கு இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை யொட்டி மூன்று நாட்கள் மட்டும் இந்த ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் காஸாவில் போலியோ நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது, போர் காரணமாக தடுப்பூசி விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மனிதாபிமானத்தின் அடிப்படையில் போர் நிறுத்தத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்று ஐ. நா. சார்பில் வலியறுத்தப்பட்டுள்ளது. இதனை யடுத்து, பல்வேறு பகுதிகளில் மூன்று நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் என இரு தரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளன.
முதலில் மத்திய காஸா பகுதி. பின்னர் தெற்கு காஸா, அதன் பிறகு வடக்கு காஸா என போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்படும். இந்த மூன்று நாட்களில் காஸா பகுதி முழுவதும் சுமார் 6 இலட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்தை ஐ. நா. சுகாதார ஊழியர்கள் மற்றும் பிற உள்ளுார் சுகாதார ஊழியர்கள் செலுத்துவார்கள்.
போலியோ சொட்டு மருந்து கொடுக்க 2,000இற்கும் மேற் பட்டவர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. காஸாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. காஸா மீதான இஸ்ரேலின் போரில் 40 ஆயிரத்து 602 பேர் உயிரிழந்தனர். 93 ஆயிரத்து 855 பேர் காயமடைந் துள்ளனர்.
காஸாவில் போர் தொடங்கி யதிலிருந்து பல இலட்சக்கணக் கான மக்கள் இடம்பெயர்ந்துள் ளனர். இந்த மக்களுக்கு அடிப்படை தேவைகளான உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்டவை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே, தொற்று நோய்கள் அதிகரித்த வண்ண முள்ளது. அதேவேளை, காஸா குழந்தைகளிடையே நோய் பரவல் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
