இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ யூடி யூப் தளம் மீது சைபர் தாக்குதல்

1 year ago



இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ யூடி யூப் தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

தற்போது அந்த தளத்தை அணுக முடியாத நிலையில், அங்கீகரிக்கப்படாத உள்ளடக்கம் அதில் பதிவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யூடியூப் தளத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் தனது முகநூல் பக்கத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், குற்றவாளிகளை அடையாளம் காண அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.