




யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் இன்று இடம்பெற்றது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரின் இணைத் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.
இதன் போது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், முப்படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
