
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 18 மாவட்டங்களில் 27 ஆயிரத்து 751 குடும்பங்களைச் சேர்ந்த 92 ஆயிரத்து 471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 17 ஆயிரத்து 952 குடும்பங்களைச் சேர்ந்த 56 ஆயிரத்து 878 பேர் பலத்த மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் 7 ஆயிரத்து 970 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரத்து 299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே வடமத்திய மாகாணத்தில் 1,369 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 599 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 319 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
7 மாகாணங்களில் 142 குடும்பங்களைச் சேர்ந்த 438 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், 320 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிக மழை காரணமாக நாட்டிலுள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 35 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் நிரம்பி வழிகின்றன என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியாளர் எல். எஸ். சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
