உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு



உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானமும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி.) செயலாளர் நாயகம் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் சந்தித்து பேசினர்.
நேற்று வியாழக்கிழமை மாலை இந்த சந்திப்பு ஈ.பி.டி.பியின் தலைமை பணிமனையில் நடைபெற்றது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சீ.வீ.கே. சிவஞானம்,
“உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க ஈ.பி.டி.பியின் ஆதரவை கோரியுள்ளோம். ஆட்சியில் பங்கெடுக்காமல் வெளியிலிருந்தே ஆதரிக்குமாறு கோரியுள்ளோம்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு வழங்கினால் வடக்கு, கிழக்கில் 35 சபைகளுக்கும் மேல் நாம் ஆட்சியமைப்போம்” - என்றார்.
டக்ளஸ் தேவானந்தா குறிப்பிடுகையில், “இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன் சார்ந்து பரிசீலிக்கப்படும்”, என்று சொன்னார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
