இராமநாதன் அர்ச்சுனாவின் எம்.பி பதவி குறித்து குழுவொன்றின் விசாரணையின் பின்னரே தீர்மானம்.-- சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவிப்பு

1 year ago



இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து குழுவொன்றின் விசாரணையின் பின்னரே தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் சபாநாயகர் இதனை கூறினார்.

குழுவொன்று அர்ச்சுனாவின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்கின்றது.

அதன் அறிக்கையை அடிப்படையாக வைத்து பாராளுமன்றத்தில் அவரின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.