












கமாண்டோ பாடநெறி 51 இன் விடுகை அணிவகுப்பு அண்மையில் ஊவ குடா ஓயா கமாண்டோ படையணி பயிற்சி பாடசாலையில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேயின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த விடுகை அணிவகுப்பில், ஏறக்குறைய ஒரு வருட கடினமான பாடநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த 06 அதிகாரிகள் மற்றும் 125 சிப்பாய்கள் கபிலநிற தொப்பிகளை அணியும் வாய்ப்பினை பெற்றுக் கொண்டனர்.
இப் பாடநெறியில் சிறந்த கமாண்டோ விருதை லெப்டினன் ஜி.சி.டி காரியவசம் பெற்றுக்கொண்டதுடன் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் விருது லெப்டினன் ஈ.டி.சி.டி. சொய்சாவுக்கும் சிறந்த உடற்தகுதி விருது சிப்பாய் பீ.கே.கே.எஸ். குமாருக்கு வழங்கப்பட்டது.
இவ் விடுகை அணிவகுப்பு இசைக்குழுக் கண்காட்சி, கயிறு ஏறுதல் காட்சி, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை காட்சி, கமாண்டோ கே9 நாய்கள் கண்காட்சி மற்றும் திறந்த பரசூட் கண்காட்சி ஆகிய காண்காட்சிகளால் வண்ணமயமாக்கப்பட்டதுடன் இந் நிகழ்வில் இராணுவ அதிகாரிகள், பாடநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பெற்றோர்கள் மற்றும் நெருங்கியஉறவினர்கள் பலர் பங்குபற்றினர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
