மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பாடசாலை மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையைப் பெற்று யன்னல் வழியாக வீசினார்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையைப் பெற்று யன்னல் வழியாக வீசிய சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 18 வயதுடைய மாணவி ஒருவர் நிறைமாதக் கர்ப்பிணி என்பதை மறைத்து வயிற்று வலி எனத் தெரிவித்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் மட்டக்களப்பு போதன வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
வைத்தியர் சரியான முறையில் சோதனையிடாத நிலையில் மாணவிக்கு ஊசி மூலமாக வயிற்று வலிக்கான வலி நிவாரண மருந்து கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிகாலை 5 மணியளவில் மாணவி மலசலகூடத்துக்குச் சென்று குழந்தையைப் பெற்று யன்னல் வழியாக வீசியுள்ளார்.
குழந்தை யன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் அங்கு சென்ற போதே மாணவி குழந்தையைப் பெற்றுள்ளார் என அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து குழந்தை மீட்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன், தாய்க்கும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்படி குழந்தையும் தாயும் பாதுகாப்பாக உள்ளனர் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
