
தலைநகர் மொஸ்கோ மீது தாக்குதல் நடத்த உக்ரைன் இராணுவத்தினர் அனுப்பிய 45 ட்ரோன்களை ரஷ்ய இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.
2022ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் ரஷ்யா-உக்ரைன் இடையே தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மொஸ்கோ மீது தாக்குதல் நடத்த 11 ட்ரோன்களை உக்ரைன் இராணுவம் அனுப்பியது. இவற்றை ரஷ்ய இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தொடங்கியதில் இருந்து தலைநகர் மொஸ்கோவை குறி வைத்து நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இது என்றும், அதை முறியடித்தோம் என்றும் ரஷ்ய இராணுவத்தினர் தெரிவித்தனர். இரு நாடுகளுக்கு இடையிலான போர் பெரும்பாலும் ஏவுகணைத் தாக்குதல் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் என்ற அளவிலேயே நடைபெற்று வருகிறது. இதில் இரு தரப்பிலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், விமானத்தளங்கள் உட்பட முக்கிய இடங்கள் தகர்க்கப் பட்டுள்ளன.
இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, மொஸ்கோவில் 11 ட்ரோன்கள் உட்பட மொத்தம் 45 உக்ரைன் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இருக்கிறோம். பிரையான்ஸ்க் பகுதியில் 23, பெல்கோராட் பகுதியில் 6, கலுகா பகுதியில் 3, குர்க்ஸ் பகுதியில் 2 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன - என்றனர்.
மொஸ்கோவில் உக்ரைன் ட்ரோன்கள் நுழைந்ததால், உடனடியாக முக்கிய விமான நிலையங்களின் சேவைகள் நிறுத்தப்பட்டன. சில மணி நேரத்துக்குப் பிறகு விமான சேவைகள் தொடங்கப்பட்டன என்று ரஷ்ய விமான சேவைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
