கம்போடியாவில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வி.அனித்தா மூன்றாவது இடம்
9 months ago

கம்போடியாவில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார போட்டியில் 19 நாடுகளுடன் போட்டியிட்டு, யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனித்தா விநயகாந்தன் மூன்றாவது இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
APHCA Cambodia Hair , Make up & Beauty Olympics 2024 போட்டிகள் வருடாவருடம் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுவது வழமை.
அந்த வகையில் இந்த போட்டியானது இந்த வருடம் கம்போடியாவில் நடைபெற்றது.
எல்லாமாக 19 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள்.
அந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த 7 போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள்.
அங்கு நடைபெற்ற மணப்பெண் அலங்காரப் போட்டியில் இலங்கை - யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையைச் சேர்ந்த அனித்தா விநயகாந்தன் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இவ்வாறு வெற்றியீட்டிய பெண்மணிக்கு பலரும் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
