


வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி பிரதேச செயலகமும், தென்மராட்சி கலாசாரப் பேரவையும், சாவகச்சேரி பிரதேச சபையும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது யாழ். வரணி கலாசார மண்டபத்தில் இன்று (21) நடைபெற்றது.
தென்மராட்சி பிரதேச செயலர் உஷா சுபலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், விருந்தினர்களாக வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் , யாழ்.மாவட்ட உள்ளூராட்சி பிரதி ஆணையாளர், சாவகச்சேரி பிரதேச சபைச் செயலாளர், மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது கலைஞர்களுக்கு "இளஞ்கலைஞர் விருது", "கலைச்சாகரம் விருது" வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு நிகழ்வை பல்வேறு கலை நிகழ்வுகள் அலங்கரித்தன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
