முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில், நாய் கடித்து ஆடு இறந்ததால் நாயை தூக்கில் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில், பக்கத்து வீட்டு நாய் கடித்ததில் ஆடு ஒன்று உயிரிழந்துள்ளது.
இதனால், இரு தரப்பினருக்குமிடையே பிணக்கு ஏற்பட்டு ஆட்டின் உரிமையாளரான பெண், நேற்று முன்தினம் இணக்க சபையில் முறைப்பாடு கொடுத்துள்ளார்.
இணக்க சபையில் விசாரணை நடத்தப்பட்டபோது, நாயின் உரிமையாளர் மிகவும் வறுமைக்கோட்டில் வாழும் பெண் என்பதால், அவர் சேதத்துக்கான நட்டஈடு வழங்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆட்டின் உரிமையாளரான பெண், குறித்த நாயை தன்னிடம் வழங்கும்படி கோரிக்கை விடுத்தார்.
இணக்க சபையின் பரிந்துரையை ஏற்று நாயின் உரிமையாளர் நாயை ஆட்டின் உரிமையாளருக்கு ஒப்படைத்தார்.
அதன்பின், பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஆட்டின் உரிமையாளரான பெண் குறித்த அந்த நாயை வளர்க்காமல் அதை தூக்கில் போட்டு கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தை நாயின் உரிமையாளர் படம் எடுத்து சமூகத்திற்கு வெளியிட்டுள்ளார்.
இதனால் மாங்குளம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
