
இலங்கை பாராளுமன்ற தேர்தலில் 1 இலட்சம் ரூபா மட்டுமே செலவிட்டு எம்.பியான பெண் சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி ஈட்டுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே செலவிட்டதாக, இம்முறை பாராளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு தெரிவான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
இதற்கு முன்னர் செயல்பாட்டு அரசியலில் பங்கேற்றது கிடையாது. பிரதேச சபை ஒன்றைக்கூட நான் பிரதிநிதித்துவம் செய்தது கிடையாது.
மக்களுக்காக நான் பாராளுமன்றம் செல்கிறேன். இது மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி.
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் எப்பொழுதும் எதிர்பார்த்ததே கிடையாது.
இம்முறை பாராளுமன்றத் தேர்தலுக்காக நான் தனிப்பட்ட ரீதியில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே செலவிட்டேன்.
எனது அரசாங்கம் மக்களுக்கு சேவைகளை செய்யத் தவறினால் கடந்த அரசாங்கங்களை விட வேகமாக மக்கள் எம்மை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கப் பெறும் சிறப்புரிமைகளில் அதிகார பூர்வ இல்லம் ஒன்று எனக்கு தேவைப்படும்.
அதற்காக விசேடமாக கோரிக்கைகள் எதையும் தாம் விடுக்கவில்லை - என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
