யாழ்.பருத்தித்திறை பொலிஸ் பிரிவில் கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில் பெண் ஒருவர் கிணற்றில் இருந்து மீட்பு

1 year ago



யாழ்.பருத்தித்திறை பொலிஸ் பிரிவில் கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில் பெண் ஒருவரது சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

தனது தாயரை நேற்று முன்தினம் பிற்பகலிலிருந்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிச்சென்ற வேளை குறித்த கம்பி வலையால் மூடிய கிணற்றடிப்      பகுதியில் தொலைபேசி சத்தம் ஒலித்தது.

அக் கிணற்றை அவரது மகன் எட்டிப் பார்த்த வேளை கம்பி வலையால் மூடிய கிணற்றிற்குள் சடலம் காணப்பட்டது.

மூன்று பிள்ளைகளின் தாயான விமலன் சிந்து என்கின்ற 42 வயதுடைய இளந்தாயார் ஆவர்.

இது தொடர்பான தீவிர விசாரணைகளை பருத்தித்துறை போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைய பதிவுகள்