சமஷ்டி, ஐ. நா. தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவும் எமது ஆட்சியில் ஒருபோதும் இடமளியோம் - அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு
8 months ago

சமஷ்டி அரசமைப்புக்கும் ஐ. நா. தீர்மானங்களை நடைமுறைப்படுத் துவதற்கும் எமது ஆட்சியில் ஒருபோதும் இடமளியோம் - இவ்வாறு கூறியுள்ளார் அரசாங்க பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று(06) புதன்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற செய்தியாளர் ஒருவர், சமஷ்டி அரசமைப்பை ஏற்படுத்தவும் ஐ.நா.தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் அரசாங்கம் பேச்சு நடத்தியதாக உதய கம்மன்பில கூறியுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பேச்சாளர்,
“சமஷ்டி அரசமைப்பையோ அல்லது ஐ. நா. தீர்மானங்களை நடைமுறைப் படுத்தவோ எமது ஆட்சியில் இடமில்லை.
அத்துடன், ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியுடன் பேச்சு எதனையும் நடத்தவுமில்லை”, என்றும் கூறினார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
