கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருதய சத்திர சிகிச்சைக்கு 5000 நோயாளிகள் 2028ஆம் ஆண்டு வரை காத்திருப்பு. மருத்துவர் சங்கம் தெரிவிப்பு.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஐயாயிரம் நோயாளிகள் 2028ஆம் ஆண்டு வரை காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர் என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவ மனையின் ஐந்து பிரதான விடு திகளில் இருதய சத்திரசிகிச்சை நிபுணர்களால் மேற்கொள்ளப் படவுள்ள இந்த சத்திரசிகிச்சைகள் தாமதமாவதால் பல நோயாளிகள் இறக்கும் நிலையும் அதிகமுள்ளது என்று மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ கூறியுள்ளார்.
இதய அறுவை சிகிச்சைக்காக தற்போதுள்ள வரிசையை முடிவுக்குக் கொண்டுவர குறைந்தது நான்கு ஆண்டுகள் ஆகும். இதுபோன்று நேரம் கடந்தால், பல நோயாளிகள் உயிரிழக்க நேரிடும். தற்போதைய சூழ்நிலையில் இதய நோயாளிகள் அறுவை சிகிச் சைக்காக தனியாருக்கு செல் லும்போது பெரும் தொகையை செலுத்த வேண்டியிருப்பதால், காத்திருப்போர் பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மற்றும் தேவைப்படுபவர்களுக்கு அரசு உதவி வழங்க வேண்டும்.
இல்லாவிடின் விசேட நோய்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மருத்துவ காப்புறுதி முறையை மக்களுக்கு அறிமுகப்படுத்துவது இன்றியமையாததாக இருக்கும் என்றும் மருத்துவர் சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
