எம்.பி அர்ச்சுனா தனக்கு தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனக்கு தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் போது தான் நடந்து கொண்ட விதத்திற்கு எதிர்ப்பு வெளியாகியுள்ளதால் தனக்கு தனிப்பட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான செயலமர்வில் கலந்து கொண்ட வேளை தான் கடும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற ஆசனம் தொடர்பான சம்பவத்தினால், என்னால் வீதியில் நடக்ககூட முடியாத நிலை காணப்படுகின்றது,
ஊடகங்கள் 45 ஐம்பது நிமிடங்கள் என்னை பேட்டி கண்டன, அவர்கள் நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவனா என கேள்வி எழுப்பினார்கள் நான் இல்லை என பதிலளித்தேன் என அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
எனினும் இரண்டாவது கேள்விக்கான எனது பதிலை அவர்கள் வேண்டுமென்றே தவிர்த்துக்கொண்டுள்ளனர்.
இதனால் வீதியில் இறங்க முடியாத நிலையில் நான் இருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் எனக்கு வழங்கப்படும் பாதுகாப்பை நாடாளுமன்ற அதிகாரிகள் எப்போது வழங்குவார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
