

உக்ரைனின் கிழக்கு பகுதியிலுள்ள இரண்டு கிராமங்களை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
தலைநகர் கார்கிவ் பகுதியில் உள்ள ஸ்டெபோவா நோவோசெலிவ்கா மற்றும் டொனெட்ஸ்க் பகுதியிலுள்ள நோவோபோக்ரோவ்ஸ்கே ஆகிய இரண்டு கிராமங்களையே தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
எனினும், இதனை திட்டவட்டமாக மறுக்கும் உக்ரைன் இராணுவம், மேற்கூறப்பட்ட பகுதிகளில் ரஷ்ய இராணுவத்தின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் முதல் உக்ரைன் தலைநகர் கார்கிவ் மீது, ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் கடந்த 3 வருடங்களாக நடந்து வரும் நிலையில், இந்த போரில் உக்ரைன் பகுதியிலேயே அதிகளவான உயிரிழப்புக்களும், சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்கு நாடுகளின் உதவியுடன், உக்ரைன் இந்த போரில் ஈடுபட்டுள்ளது. ரஷ்யாவுக்கு வட கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.
இந்த நிலையில், உக்ரைனை கைப்பற்றுவது தங்களின் நோக்கம் இல்லை என தெரிவிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளா டிர் புடின், மேற்குலக நாடுகளால், உக்ரைன் வழியாக தங்களுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
