கிளிநொச்சி ஆணையிறவு உப்பள ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்பதற்கு அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

1 month ago



கிளிநொச்சி ஆணையிறவு உப்பள ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்பதற்கு அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

கிளிநொச்சி ஆணையிரவு உப்பளத்தில் கடமையாற்றிய ஊழியர்கள் தமது உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, ஆறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து சமீபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இக்கோரிக்கைகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் என உப்பள நிர்வாக சபையினர் தெரிவித்ததை அடுத்து, வேலை நிறுத்தத்தில் இருந்த ஊழியர்கள் கடந்த 02ம் தேதி மீண்டும் தமது பணியை முன்னெடுத்தனர்.

நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றனர்.

தமது போராட்டத்தை நிற்பாட்டுவதற்காக பொய்யான வாக்குறுதி அளித்த அநுர அரசு இப்பொழுது மெளனம் காக்கிறது என ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.