மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களோடு, மக்கள் போராட்ட முன்னணியின், தேர்தல் பரப்புரைக் கூட்டம் இடம்பெற்றது.

1 year ago


தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களோடு, மக்கள் போராட்ட முன்னணியின், தேர்தல் பரப்புரைக் கூட்டம் மட்டக்களப்பு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், மக்கள் போராட்ட முன்னணி சார்பில், நுவான் போபகே போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, போராட்ட முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் தர்மலிங்கம் கிருபாகரனின் ஒருங்கிணைப்பில் கூட்டம் இடம்பெற்றது.

போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த முதலிகே பிரதான உறுப்பினராகக் கலந்து கொண்டதோடு, முன்னணியின்    திருகோணமலை மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


அண்மைய பதிவுகள்