இலங்கையில் திருடர்களை கைது செய்வதாக உறுதியளித்த அரசாங்கம் அதனை செய்ய வேண்டும்.-- சரத் வீரசேகர வேண்டுகோள்

1 year ago



இலங்கையில் திருடர்களை கைது செய்வதாக உறுதியளித்த அரசாங்கம் அதனை செய்ய வேண்டும் என பொது ஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் திருடர்களை கைதுசெய்வதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதி        அளித்திருந்தார்.

எனினும் அதனை அவர் இன்னும் செய்யவில்லை. மக்கள் அதனைத் தான் எதிர்பார்க்கிறார்கள்.

பாராளுமன்றத்துக்கு நாட்டை நேசிக்கும் நபர்கள் தெரிவு            செய்யப்பட வேண்டும்.

அரசியலமைப்பையும் பௌத்த மதத்தையும் பாதுகாக்கக் கூடியவர்கள் அவசியம்.

அதனாலேயே நாம் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறோம்.

நாட்டை நேசிக்கக் கூடிய சிறந்த குழு எமது கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிடுகிறது-என்றார்.