
தேசிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள அமைச்சர்களுள் 15 வைத்தியர்கள், 16 சட்டத்தரணிகள் மற்றும் மூன்று பொறியியலாளர்கள் மற்றும் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட சுமார் 50 இற்கும் அதிகமான கல்வியாளர்கள் உள்ளடங்குகின்றனர்.
அதன்படி, அதிகளவிலான தொழில் தகுதியுடைய கல்வியாளர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவான முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதேவேளை, நான்கு பேராசிரியர்கள் தேசிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளதாக கட்சி தெரிவிக்கின்றது.
ஹினிதும சுனில் செனெவி, சேன நாணயக்கார, சந்தன அபேரத்ன மற்றும் எல். எம் அபேவிக்கிரம அந்த பேராசிரியர்கள் ஆவர்.
மேலும், இராணுவத்தில் ஓய்வு பெற்ற அதிகாரிகள், அரச நிறுவனங்களில் முன்னாள் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல தொழில் வல்லுநர்கள் தேசிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர்.
எவ்வாறாயினும், இம்முறை தெரிவாகியுள்ள பாராளுமன்றம் கல்விமான்களால் நிரம்பியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
