யாழ் சித்துப்பாத்தி மனித புதைகுழியை சர்வதேச கண்காணிப்பின் கீழ் அகழ்வு செய்ய வலியுறுத்தி செம்மணியில் போராட்டம்







யாழ் சித்துப்பாத்தி மனித புதைகுழியை சர்வதேச கண்காணிப்பின் கீழ் அகழ்வு செய்ய வலியுறுத்தி செம்மணியில் இன்று முற்பகல் 10 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
யாழ் சித்துப்பாத்தி மனித புதைகுழியை சர்வதேச கண்காணிப்பின் கீழ் அகழ்வு செய்ய வலியுறுத்தி செம்மணி யாழ்.வளைவு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை தாங்கி “செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டும், மறைக்காதே மறைக்காதே புதை குழிகளை மறைக்காதே, எங்கே எங்கே உறவுகள் எங்கே, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்” என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
