யாழில் வெளிநாட்டில் வசிக்கும் நபருடைய அற்றோனித் தத்துவத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட இருவரை கைது

.
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டில் வசிக்கும் நபருடைய அற்றோனித் தத்துவத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை பொலிஸார் கைது செய்தனர்.
கனடாவில் வசிக்கும் நபர் ஒருவர் மானிப்பாய் பகுதியிலுள்ள தனது ஆதனங்கள் சிலவற்றுக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவருக்கு தனது அற்றோனித் தத்துவத்தை வழங்கியிருந்தார்.
குறித்த நபர் தனக்கு அற்றோனித் தத்துவத்தில் வழங்கப்படாத அதிகாரத்தை பயன்படுத்தி மேலும் சில ஆதனங்களை மோசடியாக உரிம மாற்றம் செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் இது தொடர்பில் பாதிக்கப்பட்ட கனடாவைச் சேர்ந்த நபர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து இருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தினர்.
அவர்களை பிணையில் விடுவிக்க நீதிமன்று அனுமதி வழங்கியது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
