யாழ்.புத்தூர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவனை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் தண்டித்ததால், மாணவன் கிருமிநாசினியை அருந்தியுள்ளான்
1 month ago

யாழ். வலிகாமம் கிழக்கு புத்தூர் சோமஸ்கந்தா பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தண்டித்ததால், மாணவன் வீட்டுக்குச் சென்று கிருமிநாசினியை அருந்தியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாட சாலை ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவன், தன்னிடம் அனுமதி பெறாமல் விளையாட்டு நிகழ்வு ஒன்றுக்காகச் சென்றமையால் ஆசிரியர் மாணவனை தண்டித்துள்ளார்.
அதன் பின் வீடு சென்ற மாணவன், விவசாய தேவைக்காக வீட்டில் வைத்திருந்த கிருமிநாசினியை அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்டபோது, தான் விடுமுறையில் நிற்பதாகவும், பாடசாலை ஆசிரியர் மாணவனைப் பேசியதாகவும், பின்னர் வீடு சென்ற மாணவன் மருந்து அருந்தியதாக அறிந்ததாகவும் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
